கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு |
படம் : ஆளவந்தான்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : கமல், மனிஷா கொய்ராலா, ரவீணா டாண்டன்
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு : எஸ்.தாணு
கடவுள் பாதி; மிருகம் பாதி என கமல், ரணகளம் செய்த படம் தான், ஆளவந்தான். ஆசியாவிலேயே முதன்முறையாக, மோஷன் கிராபிக்ஸ் கேமராவை பயன்படுத்திய படம், ஆளவந்தான். அதுவரையில், இந்திய திரையுலகிலேயே அதிக பிரிண்ட் போடப்பட்டது இப்படத்திற்கு தான். மொத்தம், 610 பிரிண்ட் போடப்பட்டது.
கடந்த, 1984ல், கமல் எழுதிய, தாயம் என்ற கதையை மையமாக கொண்டு தான், இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கினார் கமல். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என, அனைத்தும் கமல் தான். மொட்டை கமலாக உடல் எடையை ஏற்றி மிரட்டியிருப்பார். இயக்கம், சுரேஷ் கிருஷ்ணா என்றாலும், கமலின், டச்தான் படம் முழுதும் இருக்கும்.
தமிழ், ஹிந்தி என, இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற, 2டி அனிமேஷன் காட்சிகள், பெரும் பாராட்டுக்களை பெற்றது. கிளைமேக்ஸ் காட்சியில், இரண்டு கமலும் சண்டை போடுவதை, கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் எடுத்து மிரட்டியிருப்பர். திருவின் ஒளிப்பதிவும், சமீர் சந்தா கலையும் பிரமாதமாக இருந்தது. நடிகர் ஜெயம் ரவி, இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
சங்கர் மகாதேவன் இசையில், கடவுள் பாதி; மிருகம் பாதி, சிரி சிரி சிரி, ஆப்ரிக்கா காட்டு புலி, உன் அழகுக்கு... பாடல்கள் ரசிக்க செய்தன. இப்படத்திற்காக, கமல் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் காட்சி உடைய போஸ்டரை, மக்கள் ரசிக்கவில்லை. முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் துவங்கிய இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. தயாரிப்பாளர் தாணுவை புலம்ப வைத்தது.
ஆளவந்தான் இப்போது வந்திருக்க வேண்டியவன்! ஆளவந்தான்