டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் | நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை | எம்புரான் ரிலீஸில் புதிய சிக்கல் : லைகாவை ஒதுக்கிவிட்டு ரிலீஸ் செய்ய திட்டம்? | ஜவான் படத்தை மறுத்தது ஏன்? : மலையாள இளம் நடிகர் விளக்கம் | லோகேஷ் 40 ரஜினி 50 அமீர்கான் 60 : கூலி படக்குழு உற்சாக கொண்டாட்டம் | குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் |
2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரவீனா டாண்டன், அனுஹாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். அன்றைய தேதியில் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் தயாராகி இருந்தது. என்றாலும் அப்போது படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதனால் தயாரிப்பாளர் தாணு பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதுகுறித்து பின்னாளில் அவர் கூறும்போது “பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. திட்டமிட்டதை விட 3 மடங்கு செலவானது. சரியான திட்டமிடல் இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு பல ஆண்டுகள் ஆனது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தாணு படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார். உலகம் முழுவதும் ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இன்றைக்கு திரைப்படங்களில் நவீன தொழில்நுட்பத்தை வரவேற்கும் ரசிகர்களுக்கு ஆளவந்தான் ஆச்சர்யமூட்டும் படமாக இருக்கும் என்கிறார்கள்.