டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று விஜய் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் 2012ம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளிவந்த 'லூபர்' எனும் படத்தை வெங்கட் பிரபு ரீமேக் ரைட்ஸ் கைப்பற்றி இப்படத்தை இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லூபர் என்கிற படம் சைன்ஸ் பிக்ஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் ஹாலிவுட்டில் வெளிவந்த ஹிஸ்டிரி ஆப் வைலன்ஸ் படத்தின் கதையை மையபடுத்தி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.