உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் | முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் புதுமுக நாயகன், நாயகி | நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி | விஜயகாந்த் வழியில் பயணிக்கும் சண்முக பாண்டியன் | அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் லிங்குசாமி | 45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா | பிளாஷ்பேக்: சொப்பன சுந்தரி யார் தெரியுமா? | ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம் | பிளாஷ்பேக்: பாண்டியராஜனுக்காக ஆஸ்பத்திரி வாசலில் படுத்துக் கிடந்த கொல்லங்குடி கருப்பாயி |
கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தாக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சுழன்றடித்த நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையும் வீச துவங்கியுள்ளது. அதேசமயம் தற்போது கொரோனா தொற்றை தவிர்க்க தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆமீர்கான், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கும் கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகியுள்ளது. இவர் தான் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால் சில வாரங்களுக்கு முன்னர் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பரேஷ் ராவல். ஆனால் அதையும் மீறி கொரோனா தொற்றால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தகவலை தானே வெளியிட்டுள்ள பரேஷ் ராவல், கடந்த பத்து நாட்களாக தன்னை சந்தித்து சென்றவர்கள், தங்களை ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.