டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக விளங்கும் அல்லு அர்ஜூன், கடைசியாக நடித்த நா பேரு சூர்யா படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படத்தை தேர்வு செய்வது குறித்து குழப்பத்திலேயே இருந்து வந்தார். ஏற்கனவே இயக்குனர் விக்ரம் கே குமார் சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போய் ஓகே சொல்லியிருந்தாலும் அதில் எந்த அளவுக்கு வெற்றிக்கான சதவீதம் இருக்கும் என்கிற சந்தேகமும் அல்லு அர்ஜூனிடம் இருக்கிறதாம்.
தற்போதைக்கு ஒரு கமர்ஷியல் இயக்குனரின் படம் ஒன்றில் நடித்து ஒரு ஹிட் கொடுத்த பின்னால், விக்ரம் கே குமார் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அல்லு அர்ஜூன். அதற்காக தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் த்ரிவிக்ரமைத்தான் அவர் டிக் அடித்து உள்ளாராம். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கி வரும் த்ரிவிக்ரம் அந்தப்படத்தை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.