சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகை கஜோல். சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களாகிவிட்டது. இதில் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாரூக்கான் உடன் தில்வாலே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சினிமாவுக்கு வந்த இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட தனது பெற்றோர் பெயரையோ அல்லது தனது கணவர் பெயரையோ தன் பெயருடன் இணைத்து கொண்டதில்லை, வெறும் கஜோல் என்றே வெளியாகும். ஆனால் இப்போது முதன்முறையாக, ''தில்வாலே'' படத்திற்காக தனது பெயர் உடன், தனது கணவர் பெயரையும் இணைத்து 'கஜோல் தேவ்கன்' என்று வெளியிட சம்மதம் சொல்லியிருக்கிறார். தில்வாலே படத்தின் போஸ்டர், புரொமோஷன்களில் எல்லாம் கஜோல் தேவ்கன் என்றே வெளியாகிறது.