'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் 'மின்சார கனவு, விஐபி 2' தமிழ்ப் படங்களில் நடித்தவர் கஜோல். அவருக்கு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் திருமணம் நடந்து டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். தற்போதும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் 'மார்பிங்' செய்து 'ஏஐ' தொழில்நுட்பம் மூலம், வேறு ஒருவரது ஆபாசமான வீடியோவைப் பகிர்ந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது குறித்து பல சினிமா பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கஜோலின் வீடியோ ஒன்றை அது போல மார்பிங், ஏஐ செய்து வெளியிட்டுள்ளனர். மூன்று மாதம் முன்பு வெளியான அந்த போலி ஆபாச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மற்றொரு பாலிவுட் நடிகையான கத்ரினா கைப் வீடியோவும் இது போல வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.