பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம், சினிமாவில் ரீ-என்ட்ரி செய்துள்ள ஸ்ரீதேவி, அடுத்ததாக, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள விஜய்யின் புலி படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும், தனது கணவருமான போனி கபூரின் தயாரிப்பிலான படத்தில், அடுத்து ஸ்ரீதேவி நடிக்க உள்ளார். அம்மா - மகள் இடையேயான உறவை மையப்படுத்தியே இப்படம் உருவாக உள்ளது. ஸ்ரீதேவியை முக்கிய கதாபாத்திரமாக கொண்டே இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், மகள் கேரக்டரில் நடிக்க கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனை படக்குழுவினர் அணுகியுள்ளனர். பெண்களை மையப்படுத்திய கதை என்பதால், அக்ஷரா ஹாசன் இதில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.