தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர். அவரது தயாரிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'மைதான்'. இப்படத்தில் அஜய் தேவகன் கதாநாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக பிரியாமணி நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரிமீயர் காட்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பிரியாமணி புகைப்படக்காரர்களுக்கு 'போஸ்' கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் தயாரிப்பாளர் போனி கபூரும் சேர்ந்து நின்ற போது அவரை தோள் மீதும், இடுப்பின் மீதும் கை வைத்து 'போஸ்' கொடுத்ததை சமூக வலைத்தளங்களில் கடுமையாக ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். போனி கபூரின் செயலால் பிரியாமணி என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் பொதுவெளியில் இப்படியெல்லாம் தொட வேண்டிய அவசியம் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். போனி கபூர் செயல் வேண்டுமென்றே செய்தது போல் இருக்கிறது என்றும் கண்டித்து வருகிறார்கள்.
போனி கபூர் பிரியாமணியை எப்படியெல்லாம் தொட்டார் என்பதை விதவிதமான புகைப்படங்கள் மூலம் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். விரைவில் இது குறித்து போனி கபூர் மறுப்பு அறிக்கை தரலாம்.