பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். இதை அப்படியே இந்தியிலும் ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் நடித்தார். ரோகித் ஷெட்டி இயக்கியிருந்தார். அங்கும் இப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-2வும் வெளியாகி வெற்றி பெற்றன. அதேப்போல் இப்போது சிங்கம்-2வை, இந்தியில் சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் ரீ-மேக் செய்து வருகின்றனர். ரோகித் ஷெட்டி இயக்கும் இப்படத்தில் அஜெய் தேவ்கனே ஹீரோவாக நடிக்கிறார், கரீனா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கம்-2 கதையை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்கள் செய்து இப்படத்தை இந்தியில் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கம்-2வில் சூர்யா-அனுஷ்கா ஆடிய 'சிங்கம் டான்ஸ்...' பாடலை போன்று இந்தியிலும் அதே தொணியில் 'அடா மஜி சதகளி...' என்ற ஒரு பாடல் உருவாகியுள்ளது. இதற்கு அஜெய் தேவ்கன் -கரீனா கபூர் ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர். இவர்களுடன் பிரபல பாடகர் யோ யோ கனி சிங்கும் ஆடி, பாடியுள்ளார். கணேஷ் ஆச்சர்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளார். சுமார் 100 குழந்தைகளுக்கு போலீஸ் உடை அணிவிக்கப்பட்டு பிரமாண்டமான செட் போட்டு 3 நாட்கள் இந்தப்பாடலை படமாக்கியுள்ளனர். படத்தின் புரமோஷனுக்காக இந்தப்பாடலை தற்போது யூ-டூப்பில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களிடமும் இந்தப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.