‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

இத்தாலியா நடிகையும், அழகியுமான மோனிகா பெலூசி உலகப் புகழ் பெற்றவர். 60 வயதானாலும் இன்னும் இளமையான தோற்றத்துடன் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். இத்தாலி, அமெரிக்கா, பிரெஞ்சு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளவர்.
அவரது ரசிகர்களான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் 'கூலி' படத்தில் 'மோனிகா' என்று துவங்கும் பாடலை படத்தில் வைத்துள்ளனர். அந்தப் பாடலுக்கு பூஜா ஹெக்டேவை நடனமாட வைத்து, பாடலை சூப்பர் ஹிட்டாக்கிவிட்டனர். இப்போது அந்தப் பாடல் யு டியூப் தளத்தில் 68 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்தப் பாடலின் லின்க், மோனிகா பெலூசிக்கு அனுப்பப்பட்டு அவர் பாடலை ரசித்ததாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. யு டியூப் தளம் ஒன்றில் பூஜா ஹெக்டே அளித்த பேட்டியில் அவரைப் பேட்டி கண்டவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மோனிகா பெலூசி தனது நடனத்தையும் பாடலையும் ரசித்தது குறித்து கேட்ட பூஜா ஹெக்டே, “இதுதான் இதுவரைக்கும் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு. உண்மையில் நான் மோனிகா பெலூசியை நேசிக்கிறேன். அவர் இதை ரசித்தது எனக்கு மகிழ்ச்சி. நிறைய தமிழ் ரசிகர்கள் மோனிகாவின் இன்ஸ்டா தளத்தில் இந்தப் பாடலைப் பாருங்கள் என கமெண்ட் செய்திருந்தார்கள்” என மகிழ்ச்சியடைந்துள்ளார்.