கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! |
நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ள ஸ்ரீதேவிக்கு, இங்கு மட்டுமல்ல; ஜப்பானிலும் மவுசு ஏற்பட்டுள்ளது. அவர் நடித்த,இங்கிலீஷ் விங்கிலீஷ் படம், விரைவில், ஜப்பான் மொழியில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக, அங்கு நடந்த திரைப்பட விழாவில், இந்த படம் திரையிடப்பட்டது. இதில், ஸ்ரீதேவி நடிப்புக்கு ஜப்பான் மக்களிடையே, பலத்த வரவேற்பு கிடைத்ததாம். குறிப்பாக, பெண்கள், ஸ்ரீதேவியின் பரம விசிறியாகி விட்டனராம்.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘இந்த படத்தில், ஆங்கிலம் சரியாக பேச முடியாத பெண்ணாக நடித்திருப்பார், ஸ்ரீதேவி. ஜப்பானில் உள்ள பெண்களுக்கும், ஆங்கிலம் தகராறு தான். இதனால், அந்த படத்தில், ஸ்ரீதேவியை பார்த்தபோது, தங்களை பார்த்தது போல் இருந்ததாம், அவர்களுக்கு. அதனால் தான், ஸ்ரீதேவியை, அவர்கள் ரசிக்க துவங்கியுள்ளனர்’ என்கின்றனர்.