2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் அர்ஜூன் தாஸ். அவரது வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. 'கைதி' படத்தில் வில்லனாக அறிமுகமானவர், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அநீதி, போர் படங்களில் நடித்த அவர் தற்போது 'மௌனகுரு' சாந்தகுமார் இயக்கத்தில், 'ரசவாதி' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து அர்ஜூன் தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: என்னுடைய திரைப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி. டப்பிங் ஆர்ட்டிஸ்டாக எனது பயணத்தை தொடங்கினேன். இப்போதைக்கு டப்பிங் எதுவும் செய்யவில்லை. நடிப்பு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
'ரசவாதி' படத்தில் இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை.
ஒரு நேரத்தில் ஒரு படம் தான் செய்கிறேன் அது என் பழக்கம். கடந்த வருடம் நிறைய நடித்திருக்கிறேன். இந்த வருடம் நிறையப் படங்கள் தொடர்ந்து வரும். கைதி 2 இருக்கிறது என லோகேஷும் சொல்லியிருக்கிறார். விக்ரமில் உயிருடன் வந்ததால் நான் இருப்பேன் என நினைக்கிறேன்.
மதுமிதா இயக்கத்தில் ஒரு படம் செய்கிறேன். அதற்கடுத்து, விஷால் வெங்கட்டுடன் ஒரு படம் செய்கிறேன். இன்னும் சில படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இப்போது 'ரசவாதம்' வெளியாகவுள்ளது.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். கடந்த ஆண்டு ஒரு திரைப்படம் சம்பந்தமாக நானும், ஐஸ்வர்யா லட்சுமியும் சந்தித்தபோது ஒரு போட்டோ எடுத்து, எங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டோம். உடனே நாங்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருக்கிறோம் என்பதாகவும் வதந்தி பரவியது. அவர் எனக்கு நெருங்கிய தோழி. மற்றபடி எங்களுக்கிடையே காதல் கிடையாது. திருமணத்தைப் பற்றி எனது பெற்றோர் எதுவும் பேசவில்லை. இப்போது என் திருமணத்துக்கு எந்த அவசரமும் இல்லை. சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. என்றார்.