சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

திரைப்பட நட்சத்திரங்கள் தங்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தி காட்டுவதற்காக விலை உயர்ந்த கார்கள், வீடுகளை வாங்குவது வழக்கம். அந்த வகையில் இதுவரை எந்த நடிகர், நடிகையும் செய்திராத அளவிற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட்டும் இணைந்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பையின் மைய பகுதியில் 6 மாடி வீடு ஒன்றை கட்டி உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், இப்போது வீடு தயார் நிலைக்கு வந்திருக்கிறது. இந்த பிரமாண்ட வீட்டில் விரைவில் ரன்பீர் கபூர் தனது குடும்பத்துடன் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரன்பீர் கபூர் வீடு கட்டி இருக்கும் இடம், 1980களில் அவரது அப்பா ரிஷி கபூருக்கு, தாத்தா ராஜ் கபூர் குடும்ப சொத்தாக இருந்தது. பின்னர் கபூர் குடும்ப வாரிசு என்ற அடிப்படையில் ரன்பீர் கபூருக்கு கிடைத்த இடத்தில் இந்த வீட்டை கட்டி உள்ளனர். மும்பையில் அம்பானியின் வீட்டிற்கு அடுத்த மதிப்பு மிக்க வீடாக இது கருதப்படுகிறது.