பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீப வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி கவர்ச்சி நடனங்களிலும் கதையின் நாயகியாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அது மட்டுமல்ல தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் பல கடை திறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு பார்ட்டிகள் ஆகியவற்றிலும் கலந்து கொண்டு வருகிறார். அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் கொச்சியில் நடைபெற்ற ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது அந்த நகரமே ரசிகர்களின் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஜூபிலிகள் பகுதியில் சமீபத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் 'பாலிவுட் நைட்' என்கிற இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோன் கலந்து கொண்டு நடனம் ஆடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக புக் மை ஷோ என்கிற தனியார் ஆப் மூலமாக 500 பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய கட்டணத்தில் டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி இரவு 11 மணி முதல் 12.30 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8:00 மணியிலிருந்து கட்டணம் செலுத்திய பார்வையாளர்கள் அந்த ஹோட்டலுக்கு வர துவங்கினர். அதேசமயம் சன்னி லியோனின் வருகையை அறிந்து ஹோட்டல் முன்பாக இருந்த சாலையில் கட்டணம் வாங்காத ரசிகர்கள் பலரும் கூட்டமாக குவிய தொடங்கினர். இதனால் போகுவரத்து நெரிசல் ஏற்பட துவங்கியது.
இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறைப்படி சன்னி லியோனின் வருகைக்கு அனுமதி பெறவில்லை. ஏதாவது பிரச்னை வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் தான் இந்த ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். ஆனால் இது போலீசாரின் கவனத்திற்கு தெரிய வந்ததும் உடனடியாக அங்கே போலீஸ் அதிகாரிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் இந்த நிகழ்ச்சியை சன்னி லியோன் இல்லாமல் நடத்திக் கொள்ளுங்கள். அவர் இங்கே வருவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக நாங்கள் அனுமதிக்க முடியாது என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டனர்.
இதனை தொடர்ந்து வேறு வழியின்றி உடல்நலக் குறைவு காரணமாக இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் கலந்து கொள்ள முடியவில்லை என அப்படியே பிளேட்டை மாற்றி இந்த விஷயத்தை அந்த ஹோட்டலில் நுழைவாயில் அருகே இருந்த ஒரு பெரிய திரை மூலமாக வீடியோ வாயிலாக தெரியப்படுத்தினர். இதனால் பல ஆயிரங்களை டிக்கெட் தொகையாக செலுத்தி சன்னி லியோனை பார்க்க ஆர்வமாக வந்த பல ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தங்களது டிக்கெட்டுகளை கேன்சல் செய்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மீதம் இருந்த சில ரசிகர்களுடன் இந்த பாலிவுட் நைட் நிகழ்ச்சி நடைபெற்றது. இருந்தாலும் காவல்துறையினர் நள்ளிரவு ஒரு மணி வரை அங்கே இருந்து அனைத்தும் அமைதியாக நடக்கிறதா என கண்காணித்துவிட்டு அதன் பின்னரே கிளம்பி சென்றனர்.




