'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
காரத் கணபதி படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை நிகிதா தத்தா. தற்போது இவர் ‛ஜூவல் தீப்' என்ற படத்தில் நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் சைப் அலி கான் மற்றும் ஜெய்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகை நிகிதா தத்தா தனது கடைசிநாளின் காட்சியை செட்டில் இருந்து பகிர்ந்து கொண்டார்.
இந்த பட நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு போட்டோவை வெளியிட்டு, "படப்பிடிப்பு முடிந்தது கொஞ்சம் உணர்ச்சிகரமாக உள்ளது. அதேசமயம் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. திரையில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராபி கிரேவால் இயக்கும் இப்படம் பொழுபோக்கு நிறைந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.