திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
திரையுலகை பொருத்தவரை சத்தமில்லாமல் காதலித்து வந்த ஆதி-நிக்கி கல்ராணி ஜோடி மற்றும் சவுண்டாக காதலித்து வந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஆகியோர் திருமண பந்தத்திற்குள் நுழைந்து விட்டனர். அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படுவது இளம் நடிகர்களான விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி பற்றித்தான். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பரவலாக பேசப்பட்டாலும் தாங்கள் இருவரும் எப்போதும் நெருக்கமான நண்பர்கள் தான் எனவும் தங்களுக்குள் காதல் இல்லை எனவும் இருவருமே தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா திருமணம் பற்றி ஒரு அதிரடி தகவலை வெளிப்படுத்தியுள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர்.
சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம், ‛உங்களது சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த நடிகர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்? மூன்று பேரின் பெயர்களை கூறுங்கள்' என கேட்கப்பட்டது. அதற்கு ரன்பீர் கபூர், ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராப் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார் ஜான்வி கபூர். ஆனால் திருமணம் ஆனவர்களின் பெயர்களை இதில் கூறக்கூடாது, வேறு யாராவது ஒரு பெயரை சொல்லுங்கள் என்று கூறியதுடன் அந்த தொகுப்பாளரே விஜய்தேவரகொண்டாவின் பெயரையும் எடுத்துக் கொடுத்தார்.
ஆனால் ஜான்வி கபூரோ விஜய்தேவரகொண்டா பிராக்டிக்கலி மேரீட் என்கிற வார்த்தையை பயன்படுத்தி அந்தப் பெயரை மறுத்துள்ளார். ஜான்வி கபூர் பயன்படுத்திய வார்த்தைகள் விஜய் தேவரகொண்டாவுக்கு கிட்டத்தட்ட திருமணமாகிவிட்டது என்று குறிப்பிடுவது போலவும், ராஷ்மிகாவைத்தான் அவர் திருமணம் செய்யப்போகிறார் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாகவும் இருக்கிறது. எந்த அடிப்படையில் ஜான்வி கபூர் இப்படி ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார் என ரசிகர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.