''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் உருவான இந்தப்படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதேபோல கடந்த வருடம் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படமும் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் மீண்டும் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இதற்கான ரீமேக் உரிமையும் உடனே விலைபோனது. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்தநிலையில் இந்தியில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் திரிஷ்யம் 2 தயாராகி, வரும் நவம்பர்-18ல் திரைக்கு வர இருக்கிறது. முதல் பாகத்தை நிஷிகாந்த் காமத் இயக்க, இந்த இரண்டாம் பாகத்தை அபிஷேக் பதக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த சமயத்தில் இந்த படத்திற்கு எதிர்பாராத விதமாக ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது.
அதாவது தெலுங்கில் உருவான திரிஷ்யம்-2 படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை மனிஷ் ஷா என்பவர் பெற்றிருந்தார். தற்போது இந்தியில் திரிஷ்யம் 2 ரீமேக் விரைவில் வெளியாக உள்ள நிலையில், திரிஷ்யம்-2 தெலுங்கு படத்தின் இந்தி டப்பிங்கை நேரடியாக யூடியூப் சேனலில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார் மனிஷ் ஷா. அப்படி செய்தால் அது த்ரிஷ்யம்-2 இந்தி ரீமேக்கின் வசூலை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதை உணர்ந்த அந்த படத்தின் தயாரிப்பாளர் மனிஷ் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 3.5 கோடி கொடுத்தால் அந்த தெலுங்கு படத்தின் டப்பிங் உரிமையை ஒப்படைத்து விடுவதாக டீல் பேசியுள்ளார். இது மட்டுமல்லாமல் அந்த தொகைக்கு ஜிஎஸ்டி தனியாக தர வேண்டும் என்கிற நிபந்தனையும் விதித்துள்ளார். வேறு வழியின்றி இதற்கு ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் அவருக்கு அந்த மிகப்பெரிய தொகையை செட்டில் செய்து விட்டு திரிஷ்யம்-2 இந்தி ரீமேக்கிற்கான பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.
இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இந்த மனிஷ் ஷா என்பவர் தெலுங்கில் வெங்கடேஷின் படங்கள் பூஜை போடப்படும் அன்றே சென்று அதன் ஹிந்தி டப்பிங் உரிமையை விலைபேசி அதற்கு ஒப்பந்தமும் போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். வெங்கடேஷின் படங்கள் எப்படியாவது இந்தியில் ரீமேக்காகும் சூழல் வரும்போது தன்னிடமுள்ள டப்பிங் உரிமையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் லாபம் பார்ப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளாராம் இந்த மனிஷ் ஷா..