நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு வருடத்தில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர், தொடர்ச்சியாக அதிகப் படங்களில் நடிக்கும் நடிகர் எனப் பெயரெடுத்தவர். வித்தியாசமான கதைகளில் நடித்து விமர்சகர்களாலும் பாராட்டப்படுபவர்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வசூலைக் குவிக்கவில்லை. “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன்” என தியேட்டர்களில் வெளியான அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் தற்போது 'ராம் சேது' படமும் இடம் பெற்றுள்ளது. ராமர் பாலத்தைப் பற்றிய படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங் மிகச் சுமாராக இருந்ததால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
தொடர்ந்து நான்காவது தோல்வி என்பது அக்ஷய் குமாரின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான தடைக் கற்கள்தான். இருப்பினும் அவரது கைவசம் நான்கு படங்கள் உள்ளன. அந்தப் படங்களின் மூலம் அவர் மீண்டும் தனது பழைய வெற்றியைப் பெறுவார் என பாலிவுட்டினர் கருதுகிறார்கள்.