திருமண ரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூர்ணா | சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஆமீர்கான் ஆகியோருக்கு அடுத்தடுத்து தன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளார் 'ஆர்ஆர்ஆர்' நடிகரான ராம் சரண். சல்மான்கான் தற்போது தன்னுடைய 'கபி ஈத், கபி தீவாளி' ஹிந்திப் படத்திற்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார்.
அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் ராம் சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களை ராம்சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர். இது மூன்று தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கான் அது போல ராம்சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அடுத்தடுத்து சல்மான், ஆமீர் ஆகியோருக்கு தனது வீட்டில் விருந்தளித்தது குறித்து ராம்சரண் மனைவி புகைப்படங்களுடன் இன்ஸ்டாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார் ராம்சரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி. அதில் நடிகர் சல்மானும் கலந்து கொண்டார்.