ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் நேற்று முன்தினம் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக அறிவித்திருந்தார். ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஆலியா இரண்டு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே ஆலியா கர்ப்பம் அடைந்திருப்பார் என பாலிவுட் மீடியாக்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாலிவுட்டில் இது ஒன்றும் புதிதல்ல என்றும் இதற்கு முன்பும் சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்றும் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளார்கள். நேஹா தூப்பியா, கொன்கனா சென் சர்மா, ஸ்ரீதேவி, சரிகா, செலினா ஜெட்லி, அம்ரிதா அரோரா ஆகியோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சிலர்.
பொதுவாக பெண்கள் கர்ப்பம் அடைந்தால் நான்கைந்து மாதங்கள் கழித்தே அது பற்றி வெளியில் சொல்வார்கள். ஆனால், ஆலியா பட் இரண்டு மாதங்களில் அது பற்றி சொல்லியிருப்பதுதான் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.