எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
கொடிய வைரசான கொரோனா மீண்டும் திரைப்பட நட்சத்திரங்களை தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ஜுன் கபூர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை முர்னல் தாகூர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். டாக்டர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை கடைபிடித்து வருகின்றனர். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள். என கூறியுள்ளார்.
முர்னல் தாகூர் மராட்டிய மொழி படங்களில் இருந்து லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு வந்தவர். அதன் பிறகு சூப்பர் 30, பேட்ல் ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரி, டோபோன், டமாக்கா படங்களில் நடித்தார். தற்போது ஜெர்சி, பிப்பா, கும்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.