பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
சென்னையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் புத்தாண்டு கொண்டாட்ட விரும்பிகள் புதுச்சேரி நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இதை தொடர்ந்து புதுச்சேரியில் பல இடங்களில் தனியார் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நேற்று 3 நாள் இசை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனமாட இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு வந்தது.
சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் உள்ள பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்பினர் நேற்று பழைய துறைமுகச் சாலையில் கூடி கோஷம் எழுப்பியபடி துறைமுக வளாக நுழைவாயிலை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீச்சாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சன்னி லியோன் பேனரைக் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.