'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய்சேதுபதி இணைந்து நடித்த படம் விக்ரம் வேதா. இந்த படத்தை தற்போது ஹிந்தியில் அவர்கள் ரீமேக் செய்து வருகிறார்கள். அதில் சைப் அலி கான் மாதவன் வேடத்திலும், கிருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி படத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்ற முடிந்த நிலையில் சைப் அலிகான் சம்பந்தப்பட்ட காட்சிகள் லக்னோவில் படமாக்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தில் தமிழில் தான் நடித்த வேடத்தில் நடிக்கும் சைப் அலிகானை பற்றி மாதவன் ஒரு தகவல் கூறியிருக்கிறார். அதில், சைப் அலிகான் ஒரு விதத்தில் தனது இதயத்தையும், மனதையும் செலுத்தினால் அவர் ஒரு வித்தியாசமான அசுரனாக மாறிவிடுவார். அவர் ஒரு தனித்துவமான நடிகர் என்று பாராட்டி இருக்கிறார். மேலும் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.