ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

வளர்ந்து வரும் கன்னட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சந்தோஷ் குமார். கேம்பஸ் கிராண்டி, ஸ்டூடண்ட்ஸ், பிருந்தாஸ் கூக்லி ஆகிய படங்களை தயாரித்து இயக்கி உள்ளார். அவர் இயக்கி தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு 'யுவன் ராபின் ஹூட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பியா ஷேக் அறிமுகமாகிறார். பாலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருகிறவர் அல்பியா. இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மார்டின் கிளமண்ட் இசையமைக்கும் இப்படத்திற்கு மேத்தீவ் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் குமார் கூறுகையில், “நாயகனுக்கு அவனது அம்மா காந்தி என்று பெயர் வைப்பதோடு, காந்தியை போல் அகிம்சை குணத்தோடும், அமைதியானவராகவும் வளர்க்கிறார். தன் அப்பாவின் பாதையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய, காந்தியாக இருப்பவர், ராபின் ஹூட்டாக உருவெடுத்து பாதிகப்பட்டவர்களுக்கு தனது அதிரடி நடவடிக்கையால உதவி செய்கிறார். இதனால், அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு ஏற்பட ராபின் ஹூட்டை அழிக்க திட்டம் போடுகிறார்கள். இவரை பிடிக்க காவல்துறை ஒரு பக்கம் துரத்த, மறுபக்கம் வில்லன் கும்பல் துரத்துகிறது. இரு தரப்பிடம் இருந்தும் நாயகன் தப்பித்தாரா? இல்லையா? என்பதை அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடும், கமர்ஷியல் அம்சங்களோடும் சொல்வது தான் படத்தின் கதை” என்றார்.