இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக மற்றும் வில்லியாக நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். தெலுங்கில் குணசித்திரம் மற்றும் வில்லி வேடங்களில் கலக்கி வரும் அனுசுயா, தமிழில் சமுத்திரக்கனி நடித்த 'விமானம்' படத்தில் நடித்திருந்தார்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுசுயா சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஜெயிலர் படத்தில் வரும் 'காவாலா' பாடலுக்கு கவர்ச்சியாக ஆடை அணிந்து நடனம் ஆடினார். அப்போது இளம் ரசிகர்கள் பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். சிலர், 'ஆன்ட்டி' ஆன்ட்டி' என அனுசுயாவை பார்த்து சத்தம் போட்டனர்.
இதனால் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டு மேடையின் விழிம்புக்கு வந்த அனுசுயா அங்கிருந்த மைக்கில் ''நீங்கள் என்னை சீண்டினால், நான் என்ன செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், மேடைக்கு வாங்க பார்க்கலாம்" என்று தெலுங்கில் கத்தினார்.
இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடனம் ஆட மறுத்த அனுசுயா பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டதால், மீண்டும் நடனமாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 39 வயதாகும் அனுசுயாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.