‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் தக் லைப். கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம் திரைக்கு வந்ததில் இருந்து ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. சோசியல் மீடியாவில் கடுமையான ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அதோடு முதல் நாளில் இந்திய அளவில் இந்த தக்லைப் படம் 17 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் 7.15 கோடியாக குறைந்தது. அதையடுத்து மூன்றாவது நாள் பக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மூன்றாவது நாளில் தக்லைப் படம் தமிழ்நாட்டில் 6.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் நேற்று மூன்றாவது நாளில் 7.50 கோடி வசூலித்து இருக்கிறது.
இப்படி விடுமுறை நாளிலும் தக்லைப் படத்தின் வசூல் அதிகரிக்காதது படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதோடு இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தார்கள். ஆனால் இப்போது படத்தின் வசூல் அதில் பாதியையாவது கூட எட்டிப் பிடிக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.