'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
ராஜமவுலி இயக்கி உள்ள பாகுபலி , ஆர் ஆர் ஆர், தமிழில் விஜய் நடித்த மெர்சல் மற்றும் தலைவி என பல படங்களுக்கு கதை எழுதியவர் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். அதோடு ஹிந்தியிலும் சில படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் விஜயேந்திர பிரசாத், சல்மான்கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் என்ற படத்துக்கும் கதை எழுதியிருந்தார். கபீர் கான் இயக்கிய இந்த படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இதற்கும் விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார்.
இந்நிலையில் இருதினங்களுக்கு முன் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான்கான், பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்த படத்திற்கு பவன் புத்ர பைஜான் என டைட்டில் வைத்திருப்பதாகவும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்தப் படத்தையும் பஜ்ரங்கி பைஜான் படத்தை இயக்கிய கபீர்கான் தான் இயக்கப் போகிறாரா இல்லை வேறு இயக்குனர் இருக்கிறார்களா என்பது குறித்த தகவலை சல்மான்கான் வெளியிடவில்லை. என்றாலும் தனது பிறந்தநாளில் புதிய படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக சல்மான்கான் வெளியிட்டதால் அவரது ரசிகர்கள் அந்தப் படத்தின் டைட்டிலை மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.