சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பாலிவுட்டின் பல கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் சல்மான்கான். இரு தினங்களுக்கு முன்பு அவருடைய 56வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நவி மும்பை அருகில் உள்ள பான்வெல் என்ற ஊரில் சல்மானுக்கு சொந்தமாக பல ஏக்கர் பார்ம் அவுஸ் உள்ளது. கொரோனா காலங்களில் அவர் பெரும்பாலும் அங்குதான் தங்கியிருந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு அவருடைய பார்ம் அவுஸில் பிறந்தநாள் பார்ட்டியும் நடத்தப்பட்டது. அதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அன்று காலை முதலே சல்மானுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதனிடையே, பிறந்தநாளை முன்னிட்டு சல்மானுக்கு பல பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய அப்பா ஜுஹு கடற்கரைபகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மென்ட் ஒன்றை வழங்கியுள்ளார். அவரது மைத்துனர் 75 ஆயிரம் மதிப்புள் தங்கச்சங்கிலியைக் கொடுத்துள்ளார். சல்மானின் சகோதரி அர்பிதாகான் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை பரிசாக வழங்கியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி 16 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க மற்றும் வைர பிரேஸ்லெட், அனில் கபூர் 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள லெதர் ஜாக்கெட், சஞ்சய் தத் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர பிரேஸ்லெட், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கோபார்ட் வாட்சி, காத்ரினா கைப் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க பிரேஸ்லெட் வழங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
56 வயதான சல்மான் கான் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சில முன்னணி நடிகைகளுடன் காதல் என அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.