படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
ஹிந்தியில் அமீர்கான் தயாரித்து நடித்து வரும் பிரமாண்ட படம் லால் சிங் சத்தா. இந்தப் படத்தில் அமீர்கான் ராணுவ வீரராக நடிக்கிறார். பாலா என்ற ஆந்திர இளைஞராக இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நாக சைதன்யா. அவர்கள் இருவருக்குமே படத்தில் ராணுவ வீரர்கள் வேடம்தான். ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற படத்தின் அதிகாரபூர்வமாக ஹிந்தி ரீமேக் ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் கரீனா கபூர் நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பரில் அறிவித்திருந்த அமீன்கான், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தாமதமாகி வந்ததால் 2022 பிப்ரவரி காதலர் தினத்தின்போது வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டதால் தற்போது ரிலீஸ் தேதியை மீண்டும் மாற்றுவதற்கு முடிவு செய்திருக்கிறார் அமீர்கான். அதன் காரணமாகவே படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.