அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், துணிச்சலான கருத்துக்களை வெளியிடுகிறவர், சமீபத்தில் இந்தியா பெற்ற சுதந்திரம் ஆங்கிலேயர்கள் போட்ட பிச்சை என்றார். இது கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக காந்தி பற்றிய சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛நீங்கள் காந்தி ஆதரவாளராக இருக்கலாம். இல்லையேல் நேதாஜியின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் நீங்கள் இருவரின் ஆதரவாளராகவும் இருக்க முடியாது. எனவே, நீங்கள் சுயமாக முடிவு செய்து யாருக்கு ஆதரவு என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
அதிகாரப் பசியில் இருந்தவர்கள், மிகவும் தந்திரமாக செயல்பட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் காட்டிக்கொடுத்து ஒப்படைத்தனர். அத்தகையவர்களுக்கு உண்மையில் அடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் துணிச்சல் இல்லை. உங்களின் ஒரு கன்னத்தில் யாரேனும் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள், அப்போது தான் சுதந்திரம் கிடைக்கும் எனக் கற்றுக் கொடுத்தவர்கள் நமக்கு சுதந்திரத்தை பிச்சை எடுத்துக் கொடுத்தனர். ஆகையால் உங்களுடைய ஹீரோக்களை மதிநுட்பத்துடன் தேர்வு செய்யுங்கள்.
மகாத்மா காந்தி ஒருபோதும், பகத் சிங்கையோ, சுபாஷ் சந்திர போஸையோ ஆதரித்தது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களை அவர்களின் பிறந்த நாளில் நினைவு கூர்வது ஏற்புடையது அல்ல. உண்மையான வரலாற்று நாயகர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.