ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல இளம் படத்தயாரிப்பாளரும், ஓ.கே. ஓ.கே. கதாநாயகருமான உதயநிதி ஸ்டாலினின் காதல் மனைவி கிருத்திகா உதயநிதி, கணவர் உதயநிதி கதாநாயகராக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதவி இயக்குநராக அப்பட இயக்குநர் எம்.ராஜேஷிடம் பணிபுரிந்தார் என்பதும், எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய ஒரு சில குறும்படங்களை இயக்கியவர் என்பதும் தெரிந்ததுதான். தற்போது விஷயம் அதுவல்ல... அடுத்தடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் வேளையில் அம்மணி கிருத்திகாவோ, கணவரது புரடக்ஷ்னில் பணிபுரியாமல், தற்போது பா.ம.க., தலைவர் ஜி.கே. மணியின் வாரிசு, தமிழ்குமரன் தயாரிப்பில், அகமது இயக்கத்தில், ஜீவா-த்ரிஷா நடிக்க உருவாகி வரும் "என்றென்றும் புன்னகை" படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
கிருத்திகா பிறர் புரடக்ஷ்ன்களில் உருவாகும் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டிய அவசியத்தையும் - நிதர்சனத்தையும் உதயநிதி தான் விலக்கி சொல்ல வேண்டும்?!