ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தல நடிகர் நடித்த படத்தை இயக்கிய அந்த மேனன், தற்போது விரல்வித்தை நடிக்கும் படத்தை இயக்குகிறார். மேற்படி நடிகர் படப்பிடிப்புக்கு ஒழுங்காகவே வருவதில்லை என்று மெரினா டைரக்டர் குற்றம் சாட்டியதை அடுத்து மேனன் படத்திலும் அதே பிரச்னை வெடிக்கும். அதனால் நடிகரும், டைரக்டரும் மல்லுக்கு நிற்பார்கள் என்றுதான் கோலிவுட்டில் கிசுகிசுத்தனர்.
ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையே வேறு. ஏற்கனவே மெரினா டைரக்டர் இயக்கும் படத்திற்கு ஏற்பட்டிருப்பதைப்போன்று இப்போது மேனன் டைரக்டருக்கும் பைனான்ஸ்தான் பெரும் பிரச்சினையாகியிருக்கிறதாம். விரல்வித்தை நடிக்கும் படம் என்பதால் அந்த படத்தை நம்பி பைனான்ஸ் கொடுக்க தயங்குகிறார்களாம். அதனால், பாதி கிணறு தாண்டிய நிலையில், பைனான்ஸ்க்காக அலைந்து கொண்டிருக்கிறார் மேனன்.