ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சீனியர் நாட்டாமை நடிகருக்கும், ஜூனியர் சண்டக்கோழி நடிகருக்கும் நடக்கும் மோதல்தான் இப்போ சினிமா வட்டாரத்துல ஹாட் டாபிக். ஆக்டருங்க சங்கத் தலைவர் பதவியிலேருந்து நாட்டாமைய கீழே இறக்கியே தீருவது என சண்டக்கோழி நடிகர் தீவிரமா வேலை செய்றாராம். ஆக்டருங்க சங்க இடத்தை கைமாற்றி விட்டதுல நாட்டாமையும், அவரது மச்சான் நடிகரும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களாம். அதற்கு ஆதாரபூர்வமா வச்சிருக்கிறாராம் சண்டக்கோழி. இதை எல்லா யங் ஹீரோக்கள்கிட்டேயும் காட்டி நாட்டாமைக்கு எதிரா கையெழுத்து வேட்டை நடத்துறாராம். எல்லா யங் ஹீரோவும் கையயெழுத்து போட்டுருக்காங்களாம். ஆக்டருங்க சங்கத்துக்கு யங் லீடரு வரட்டும்னு உலக நாயகனும் கையெழுத்துப் போட்டுட்டாராம். இனி உச்ச நடிகருக்கிட்ட மட்டும் கையெழுத்து வாங்கிட்டா மீடியாவ கூப்பிட்டு பேச இருக்காறாம் சண்டக்கோழி. இதுல வேடிக்கை என்னான்னா... சண்டக்கோழி பின்னாடி முதல் ஆளா நிக்குறது நாட்டாமையோட லட்சுமிகரமான மகள்தானாம்.