ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி | மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா |
கன்னடத்தில் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் திரையுலகிலும் பொதுமக்களிடமும் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றவர்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் அவரது குடும்பத்திற்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் ராஜ்குமார் குடும்ப வாரிசும் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் சகோதரரான ராகவேந்திரா ராஜ்குமாரின் மகனுமான யுவராஜ் குமார் தனது மனைவியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளது ரசிகர்களிடையே மீண்டும் ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தனது தந்தை மற்றும் சித்தப்பாக்களை போல யுவராஜ் குமாரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான யுவா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படமும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தான் தனது மனைவி ஸ்ரீதேவி பைரப்பாவை விவாகரத்து செய்ய யுவராஜ் குமார் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியே வந்துள்ளது. யுவா திரைப்படம் வெளியான சமயத்திலேயே அதன் நிகழ்ச்சிகளில், கொண்டாட்டங்களில் எதிலுமே ஸ்ரீதேவி பைரப்பாவை பார்க்க முடியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த விவாகரத்து தகவல் அதை உறுதிப்படுத்தியுள்ளது.