ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கிரிக்கெட் படத்துல அறிமுகமான வெற்றி நடிகருக்கும், கடைத்தெரு படத்துல பாப்புலரான நடிகைக்கும் லவ் உண்டாகி கொஞ்ச நாள் லவ்விக்கிட்டிருந்தாங்க. நடிகையோட தாய்குலம் "லவ் பண்ணினா பெரிய ஸ்டாருங்கள லவ் பண்ணுன்னு இல்லேன்னா சும்மா இரு"ன்னு மகளுக்கு அட்வைஸ் பண்ணி அடக்கி வச்சிட்டாங்க. ஆனாலும் நடிகைக்கு வெற்றி நடிகரை மறக்க முடியல. இந்த நிலைமையில வெற்றியோட பெற்றோர்கள் மகனுக்கு தீவிரமாக பொண்ணு தேட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனாலும் மகன் " எனக்கு பொண்ணு பார்க்க வேண்டாம். என்னோட காதல் ஜெயிக்கும் அவள் நிச்சயம் என்னைத் தேடி வருவா" என்று நம்பிக்கையோட சொல்லியிருக்காராம். நடிகரோட தந்தைகுலம், நடிகையோட தாய்குலத்துக்கிட்ட பேசியிருக்காரு "என் மகள் பொன்முட்டையிடுற வாத்து அதை பிடிச்சிட்டு போயிடலாமுன்னு பார்க்குறீங்களா? இதுக்கு மேலயும் தொந்தரவு பண்ணினா "அவர்"கிட்ட சொல்லி உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்"னு சொன்னாராம். அந்த அவர் மதுரைக்கார பவர்புல் பாலிடிக்ஸ் பார்ட்டியோட ரொம்ப நெருக்கமான உறவுகாரராம். அவர்தான் நடிகைக்கும், நடிகையோட தாய்குலத்துக்கும் காட்பாதர் மாதிரியாம்.