25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ஒரு ஹிட் படத்தில் நடித்ததுமே, அமிதாப் ரேஞ்சிற்கு, 'பில்டப்' கொடுக்கும் நடிகர்களுக்கு மத்தியில், பல ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி, 'நல்ல பிள்ளை' என கோலிவுட்டில் பெயர் எடுத்துள்ளார். 'ஆதி பகவன், நிமிர்ந்து நில்' ஆகிய படங்களின் தோல்வியால் தடுமாறினாலும், 'ரோமியோ ஜூலியட், பூலோகம், அப்பாடக்கர், தனியொருவன்' ஆகிய படங்களின் மூலம் தன்னை மீண்டும் நிரூபிக்க தயாராகி வருகிறார். ஒரு அழகான மாலை இளம் வெயில் நேரத்தில் அவரை சந்தித்தபோது...
* ரோமியோ ஜூலியட் என்ன ஸ்பெஷல்.?
படத்தில் நான் ரோமியோ, ஸ்பெஷல்னா.? படத்தில் ஆர்யாவுக்கு ஜிம் டிரைனராக வருகிறேன். எனக்காக நான் கேட்டதும் நடிக்க ஒத்துக்கிட்டது மட்டுமில்லாமல் அவராகவே முன்வந்து டப்பிங் பேசி முடித்து கொடுத்தார். இதுவரை என் படங்களில் கிண்டல், கேலி எல்லாம் இருக்காது, ஆனால் இந்தப்படத்தில் அது எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இரக்கும். புதுவித அனுபவமாக இருந்தது, மிகவும் விரும்பி செய்த ரோல் இப்படம்.
* எந்த மாதிரி படங்கள் நடிக்க ஆசை?
என்னைக்குமே, வெற்றி பெறக்கூடிய ஸ்கிரிப்ட் அமையணும்னு தான் நினைப்பேன். அதே மாதிரி, நான் இந்த மாதிரி கேரக்டர் பண்ணணும்னு தேடிப் போனதில்லை. என்னை நம்பி, என்னால் முடியும்னு வந்த இயக்குனர்கள் படங்களில் தான் நடிக்கிறேன். பேராண்மை மாதிரி படங்கள், அப்படி வந்தவை தான்.
* சதா, அசின் என, புது ஹீரோயின்கள் உங்கள் படங்களின் தான் அறிமுகமாயினர், அதுகுறித்து...
அந்த கதைகளுக்கு, எந்த இமேஜும் இல்லாத புதுமுக நடிகைகள் தேவைப்பட்டாங்க. அதனால், புதுமுகங்களை தேர்வு செய்தோம். இப்போது நடிக்கும் படங்களுக்கு, ஏற்கனவே மக்களுக்கு தெரிந்த ஹீரோயின்களாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அதனால் தான், த்ரிஷா, ஹன்சிகா, அஞ்சலி ஆகியோருடன் நடிக்கிறேன். 'பூலோகம்' படத்தில், திரிஷா, எனக்கு டிப்ஸ் கொடுத்தாங்க. அந்த இடத்தில் ஒரு புதுமுகம் இருந்தா நல்லா வராது. அதேபோல் 'தனியொருவன்' படத்தில் நயன்தாரா இருக்காங்க. படத்தில் எனக்கு பெரிய சப்போர்ட்டா இருப்பாங்க.
* வெற்றி, தோல்வியை எப்படி எடுத்துக்குவீங்க?
வெற்றியை விட, ஒரு தோல்வியில் தான் அதிகமான அனுபவம் கிடைக்கிறது. அந்த படங்களில் மூலமாகத் தான், 'எப்படி, எந்த இடத்தில் மிஸ் பண்ணோம், எங்க தவறு வந்துச்சு' என, அந்த தவறை, அடுத்த படங்களில் சரி செய்ய நினைப்பேன்.
* உங்கள் நண்பர்கள் விஷால், ஆர்யா எப்ப தான் திருமணம் செய்யப் போறாங்க?
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்னு சொல்வாங்க. ஆனா, விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் கல்யாணம் பண்ணிப் பாருங்கன்னு சொல்வேன். அந்த அளவு அதில் கஷ்டம். கல்யாணம் சீக்கிரம் பண்ணுங்கப்பா, உங்களால், எங்க பேரெல்லாம் கெட்டுப் போகுதுன்னு அடிக்கடி சொல்லிட்டு வர்றேன்.
* இந்த மாதிரி ஒரு நடிகரோட பழகுறது ரொம்ப கஷ்டம்னு யாரும் இருக்காங்களா?
வேற யாரு; நம்ம ஆர்யா தான். ஏதாவது ரகசியமான விஷயத்தை பற்றி கூறினால், அந்த விஷயம் யாருக்கு தெரியக் கூடாது என நாம் நினைக்கிறோமோ, அந்த நபரிடமே சொல்லி மாட்டி விட்டுடுவான். 'உங்களை பற்றி ரவி என்ன சொன்னான் தெரியுமா' என ஆரம்பித்து, முழுசா போட்டு கொடுத்துடுவான், அவனை மட்டும் நம்பிடக் கூடாது.
* எப்போ இயக்குனர் ஆகப் போறீங்க?
'ஆளவந்தான்' படத்தில், நான் உதவி இயக்குனராக இருந்திருக்கேன். எனக்கு டைரக் ஷன் மேல ஆசை இருக்கு. ஆனால், கொஞ்ச கால அவகாசம் தேவைப்படும். இப்போது தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். வெளிநாடு போய், இதற்கான படிப்பு படிக்க ஆசைப்படுறேன்.
* உங்களுடன் ஜாலியாக பழகும் ஹீரோயின்?
ஜெனிலியா, திரிஷா கூட நிறைய விஷயங்களை பகிர்ந்துக்குவேன்.
* எந்த நடிகரோட ஒரு படமாவது நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க?
ஆசை இருக்கு, ஆனால், அது முடியாதுனு நினைக்கிறேன். கமல் சார் கூட ஒரு படமாவது நடிக்கணும்னு ஆசை இருக்கு. 'அன்வே சிவம்' படத்தில் மாதவன் ரோல் மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் அமையணும்.
* டண்டனக்கா பாட்டு - பட்டைய கிளப்புதே?
டி.ஆர்., சார் ஹீரோயினை தொடாமல் நடிப்பார். 'டண்டனக்கா' பாட்டில் வரும் ஹீரோவும் அப்படி தான். படம் பார்த்தா தெரியும். 'எங்க தல... எங்க தல டி.ஆர்., சென்டிமென்ட்ல தாறுமாறு' என, இருக்கும். இதில், அவர் வருத்தப்படுவது போல் எதுவும் இருக்காது, நானே டி.ஆர்., சாரின் பரம ரசிகன். இந்த பாட்டு, இப்ப எல்லா இடங்களிலும் கேட்பது சந்தோஷமாக இருக்கு.