ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் மே 1ம் தேதி வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் பேமிலி'.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கூட இந்தப் படத்தைப் பார்த்து வியந்து அறிமுக இயக்குனர் அபிஷனைப் பாராட்டியுள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூலைக் குவித்த படங்களில் இந்தப் படம் முதலிடத்தில் இருக்கிறது.
தயாரிப்பு நிறுவனமே படம் 75 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்திருந்தது. இன்றுடன் இப்படம் 25வது நாளைத் தொட்டுள்ளது. அதே நாளில் வெளிவந்த சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தால் இந்தப் படம் கவனத்தை ஈர்க்காது என்று சொல்லப்பட்ட நிலையில் மாபெரும் வெற்றியையும், வரவேற்பையும் இப்படம் பெற்றது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
படம் 25வது நாளைத் தொட்டுள்ளதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளார்கள். புதிய கதை, இயல்பான கதாபாத்திரங்களுடன் படங்களை உருவாக்கி வரும் இளம் இயக்குனர்களுக்கு இப்படத்தின் வெற்றி பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.