அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பிறமொழியை சேர்ந்த நடிகைகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முன்பெல்லாம் மும்பை நடிகைகள் அதிகளவில் தமிழ் படங்களில் நடித்து வந்தனர். பின்னர் மலையாள நடிகைகள் ஆதிக்கம் செலுத்தினர். இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்லது பிறமாநிலமாக இருந்தாலும் நன்கு தமிழ் பேச தெரிந்த நடிகைகள் சினிமாவில் அசத்தி வருகின்றனர். குறிப்பாக டிவியிலிருந்து பல நடிகைகள் சினிமாவிலும் சாதித்து வருகின்றனர். அப்படி டிவியில் வந்து சினிமாவில் சாதித்து வரும் நடிகைகளை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக தனது பணியை துவக்கி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின் மளமளவென பல படங்களில் நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமா மட்டுமல்லாது வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.
வாணி போஜன்
ஆஹா என்ற டிவி சீரியல் மூலம் நடிகையாக கால் பதித்த வாணி போஜன், தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவருக்கு ஓ மை கடவுளே படம் வெளிச்சம் தந்தது. தொடர்ந்து மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, அஞ்சாமை போன்ற படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். நிறைய வெப்சீரிஸிகளிலும் நடித்து வருகிறார்.
வித்யா பிரதீப்
மருத்துவம் தொடர்பான படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் ‛நாயகி' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சைவம், பசங்க 2 போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் தடம் படம் இவருக்கு புகழ் வெளிச்சம் தந்தது. சித்திரைச் செவ்வானம், செல்பி, பவுடர், டி3 போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி உள்ளார்.
ரச்சிதா மகாலட்சுமி
பெங்களூரை சேர்ந்த ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார். தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி 2, 3 சீரியல்களில் நடித்தவர் அப்படியே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்தாண்டில் இவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம், பயர் ஆகிய படங்கள் வெளியானது. இவற்றில் பயர் படத்தில் கிளாமராகவும் நடித்தார்.
ஷீலா ராஜ்குமார்
அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் நடித்து வந்த ஷீலா ராஜ்குமார் அப்படி சினிமா வாய்ப்பு வர ஹீரோயின் ஆகிவிட்டார். டூ லெட் படம் மூலம் சினிமாவில் நாயகியாக கால் பதித்த இவர் தொடர்ந்து திரவுபதி, மண்டேலா, ஜோதி போன்ற அழுத்தமான கதை அம்சம் உள்ள படங்களில் நடித்தார். தற்போது சின்ன பட்ஜெட்டில் தயாராகும் பல படங்களில் நாயகியாக நடிக்கிறார்.
காவ்யா அறிவுமணி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த வீஜ சித்ரா மறைந்ததும் அந்த ரோலில் நடித்து டிவி ரசிகர்களை கவர்ந்தவர் காவ்யா அறிவுமணி. பின்னர் சீரியலில் இருந்து சினிமா வாய்ப்பை பெற்ற காவ்யா, 2022ல் 'மிரள்', 2023ல் 'ரிப்பப்பரி' ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். தற்போது ‛நிறம் மாறும் உலகில்' படத்தில் நாயகியாக நடிப்பவர் மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
ரோஷினி ஹரிப்பிரியன்
பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கண்ணம்மா என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். வேறு சீரியல்களில் நடிக்காத இவர் கடந்தாண்டு சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான கருடன் படத்தின் மூலம் சினிமாவிலும் கால் பதித்தார். தொடர்ந்து இவரை அடுத்தடுத்த படங்களில் நாயகியாக பார்க்கலாம். வெப்சீரிஸிலும் நடிக்க பேசி உள்ளார்.
வீஜே அர்ச்சனா
தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. அதன்பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார். அதன்பின் சினிமாவில் முயற்சித்தவருக்கு கடந்தாண்டு வெளியான ‛டிமாண்டி காலனி 2' படத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் முயற்சியில் உள்ளார். சினிமாவில் நடிப்பதற்காகவே சீரியலில் நடிக்கவில்லை என்கிறார்.