வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
கன்னட திரையுலகில் இயக்குனர், நடிகர் என இரண்டு ஏரியாக்களிலும் வெற்றிகரமாக பயணித்து வருபவர் நடிகரும் இயக்குனருமான உபேந்திரா. கன்னடத்தையும் தாண்டி தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‛கூலி' திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிப்பில் பி. மகேஷ்பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ஆந்திரா கிங் தாலுகா என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சமீபத்தில் இவர் இந்த படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுவதாக கூறியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சூரியகுமார் என்கிற கதாபாத்திரத்தில் தான் உபேந்திரா நடிக்கிறாராம். அவரது தீவிர ரசிகராக ராம் பொத்தினேனி நடிக்கிறார். ஒரு ரசிகனின் சுயசரிதையாக இந்த படம் உருவாகி வருகிறதாம்.