பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழில் 'குக்கூ' திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. ஏற்கனவே இவர் 'செல்லுலாய்டு' என்ற மலையாள படத்தில் பாடல்கள் பாடி அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் படங்களில் பாடிய பிறகே பிரபலமானார்.
'வீரசிவாஜி' என்ற படத்தில் இவர் பாடிய 'சொப்பன சுந்தரி நான் தானே ... சொப்பன லோகத்தின் தேன் தானே' என்ற பாடலும், ஜெய்பீம் படத்தில் 'மண்ணிலே ஈரம் உண்டு முள் காட்டில் பூவும் உண்டு' என்ற பாடலும், தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த பாடலாகும். கடந்த ஆண்டு கேரள அரசின் கேரளஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
சமீபத்தில் கோவை வந்திருந்த வைக்கம் விஜயலட்சுமியை சந்தித்து பேசினோம்...
எந்த வயதில் பாட துவங்கினீர்கள்?
எனக்கு எல்லாமே சங்கீதம்தான். ஐந்து வயதில் கர்நாடக இசை கற்றுக்கொள்ள துவங்கினேன். அன்றில் இருந்து இசையை தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். காரணம் இசை கடல் போன்றது. அதை யாரும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது.
சமீபத்தில் நீங்கள் பாடிய புதிய படங்கள் பற்றி?
தமிழில் அரண்மனை 3, நீலகண்டா ஆகிய படங்களில் தமிழ், தெலுங்கு இரண்டிலும் பாடி இருக்கிறேன். மலையாளத்தில் மூன்று படங்களில் பாடி இருக்கிறேன். இன்னும் சில படங்கள் உள்ளன.
இன்னும் எந்த இசை அமைப்பாளர் இசையில் பாட விருப்பம்?
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பட வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. அவர்கள் இசையில் பாடும் நாள் எனக்கு இனிய நாளாக இருக்கும்.