காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நடிகையாகவும், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் என பன்முக திறமையாளராக வலம் வருகிறார் சஷ்டிகா ராஜேந்திரன். சென்னையில் வசித்து வரும் இவர் தினமலர், சண்டே ஸ்பெஷலுக்காக பகிர்ந்து கொண்டது...
பிறந்தது குன்னுார். வளர்ந்தது எல்லோமே ஊட்டி. பணிக்காக சென்னை வந்து விட்டேன். சிறு வயதிலிருந்தே தொலைக்காட்சி தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டுமென்ற ஆசை அதிகம். ஏனெனில் வீட்டில் ஆங்கில செய்தி தொலைக்காட்சி பார்ப்பது அதிகம். பெண் ஊடகவியலாளர் என்பதே அரிதாக இருந்தது. எப்படி செய்தி வாசிக்கிறார்கள், பேசுகின்றனர் என்பதை பார்த்து அதன் மீதான ஆர்வம் வந்தது.
ஒரு தனியார் டிவியில் பணியில் சேர்ந்த போது, மக்களுக்கு ஒரு விஷயத்தை எவ்வாறு கொண்டுபோவது, எது பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். இது என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அவ்வாறு பணியாற்றும்போது 'வாய்ஸ் ஓவர்' செய்வதற்கான வாய்ப்பு வந்தது. டப்பிங் என்பதை காட்டிலும் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்டாக இருப்பது மிகவும் கடினமாக இருந்தது.
தமிழ் மீது இருந்த ஆர்வத்தால், உச்சரிப்பு தொடங்கி வார்த்தை பிரயோகங்கள் வரை கற்றுக் கொண்டேன். தொடர்ந்து செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பயணங்கள் சென்றது. சிறிய இடைவெளிக்குப்பின் தான் விளையாட்டுத்துறையில் தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
டி.என்.பி.எல்., போன்ற கிரிக்கெட் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி உள்ளேன். வெளியில் இருந்து விளையாட்டை பார்ப்பதற்கும் நேரில் களத்தில் இருந்து அது குறித்து தொகுத்து வழங்குவதற்கும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதை உணர முடிந்தது.
மைண்ட் கேம், ஸ்ரேட்டஜி என பல்வேறு விஷயங்கள் விளையாட்டில் உள்ளன. நிறைய திறமையாளர்களை பார்க்க முடிந்தது. பல கிரிக்கெட் வீரர்களிடம் பேசியதும், பேட்டி எடுத்ததும் நல்ல அனுபவம். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் கலந்துரையாடியது சிறந்த அனுபவம். தொடர்ந்து அவருடைய யுடியூப் சேனலில் ஆசோசியேட்டாக வாய்ப்பு கிடைத்தது.
விளையாட்டுத் துறையாகட்டும், கலைத் துறையாகட்டும் நல்ல முயற்சியோடு, முன்னதாகவே பயணத்தை தொடங்கினால் வெற்றி நிச்சயம். இது போன்ற துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவுதான். எந்த தொழிலாக இருந்தாலும் பெண்களுக்கு நிறைய சவால்கள் இருக்கதான் செய்யும். அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே வெற்றி இருக்கிறது. தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்.
சோஷியல் மீடியாக்களை பொறுத்தவரையில் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் யாரையும் பின்பற்றியோ, அவர்களைப் போல் வர வேண்டுமென்றோ நினைக்க கூடாது. பெண்கள் தங்களுக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தற்போது இந்த நிலையில் இருப்பதே கனவில் இருப்பதைப் போன்று உள்ளது. எதிர்கால கனவு என்பதே மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டே இருப்பதுதான் என்றார்.