அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
மலையாளத்தில் மிகவும் அதிக படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள எவர்கிரீன் கூட்டணி என்றால் அது மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன் கூட்டணி தான். கடைசியாக இவர்கள் மரைக்கார் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இந்த நிலையில் 'ஒலவும் தீரவும்' என்கிற படத்தில் மீண்டும் மோகன்லாலை இயக்குகிறார் பிரியதர்ஷன். ஆனால் இது திரைப்படம் அல்ல குறும்படம். ஆம், ஓடிடி நிறுவனம் மலையாளத்தில் 10 குறும்படங்களை கொண்ட ஆந்தாலாஜி படம் ஒன்றை தயாரிக்கிறது. இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளை மையமாக வைத்து உருவாக இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த ஒலவும் தீரவும் படம்.
இந்த படத்தில் தற்போது வில்லனாக ஹரீஷ் பெராடி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் ஹரிஷ் பெராடி. இதில் என்ன ஹைலைட் என்றால் மோகன்லால் தற்போது தலைவராக இருக்கும் மலையாள நடிகர் சங்கத்தை விமர்சித்து, சங்கத்தின் கண்டனத்துக்கு ஆளாகி, விளக்கம் கேட்கும் நோட்டீஸ் பெற்றவர் தான். ஹரிஷ் பெராடி. ஆனால் விளக்கம் அளிக்க விரும்பாமல் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்த ஹரிஷ் பெராடி இப்போது மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது ஆச்சரியமான விஷயம் தான்.