தசரா பட டப்பிங்கை ஆறு நாட்களிலேயே முடித்தேன் ; கீர்த்தி சுரேஷ் | ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளுக்கு ஆலியா பட் அனுப்பி வைத்த அன்பு பரிசு | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க நானும் ஒரு காரணம் ; அஜய் தேவ்கன் | சுந்தர்.சி படத்தில் விஷாலுக்கு பதிலாக பிருத்வி ராஜ்? | பிரபல இளம் நடிகை அகன்ஷா துபே தூக்கிட்டு தற்கொலை | மயோசிட்டிஸில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டாரா சமந்தா? | காஜல் அகர்வாலின் கருங்காப்பியம் ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ்! | கரகாட்டக்காரன்- 2 படத்தை இயக்கும் வெங்கட் பிரபு! | பத்து தல படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள் | லவ் டுடே ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் மற்றும் போனி கபூர் வாரிசுகள் |
கொரோனா தொற்று மீண்டும் மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது. மலையாள குணசித்ர நடிகையும், இணை இயக்குனருமான அம்பிகா ராவ் காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்னை காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அம்பிகா ராவ் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக ஆபரேஷன் நடக்க இருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அம்பிகா ராவ். கிருஷ்ண கோபால கிருஷ்ணா என்ற படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு தொம்மனும் மக்களும், சால்ட் அன்ட் பெப்பர், ராஜமாணிக்கம், வெள்ளி நட்சத்திரம் உள்பட பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தார். மீசை மாதவன், அனுராக கரிக்கின் வெள்ளம், தமாஷா, வைரஸ், கும்பளங்கி நைட்ஸ் உள்பட பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.