ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகை பொறுத்தவரை கொரோனா தாக்கம் படப்பிடிப்பையும் படங்களின் வெளியீட்டையும் நிலைகுலையை வைத்தாலும் மலையாளத்தில் நடிகர் மோகன்லாலின் படங்கள் மட்டும் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகி வந்தன. குறிப்பாக திரிஷ்யம்-2, ப்ரோ டாடி, சமீபத்தில் வெளியான டுவல்த் மேன் ஆகிய படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன. அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது படங்களான மரைக்கார் மற்றும் ஆராட்டு ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியானாலும் வரவேற்பை பெறத் தவறின.
இந்தநிலையில் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் அலோன். நீண்ட நாளைக்கு பிறகு இயக்குனர் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ளார் என்பதால் இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இந்த படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் கூறியுள்ளார். படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி இந்த படத்தில் மோகன்லால் ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுவதால் தியேட்டர்களில் இந்தப்படத்தை திரையிட்டால் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் ஓடிடி தளத்திலேயே வெளியிட முடிவு செய்துள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.