பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
மாடன் மங்கையே, இளசுகளின் கனவே, மதிமயக்கும் நிலவே, அழகுக்கு அழகு சேர்க்கும் அற்புதமே, பூ மணம் மாறாத புன்னகையே, மங்களம் பொங்கும் ஐஸ்வர்யம் என ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன் வாசகர்களுக்காக மனம்திறந்தவை...
சினிமா வாய்ப்பு எப்படி
நிறைய விளம்பர படங்களில் நடித்து, ஸ்கிரீன் டெஸ்ட், ஆடிஷன்ஸ் எல்லாம் கொடுத்து தான் சினிமா வாய்ப்பு கிடைச்சது.
குடும்பத்தினரின் ஆதரவு
என்னுடைய அண்ணன் டாக்டர், நான் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்பா, அம்மா ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க.
கதாநாயகி ஆனது உங்கள் கனவா, எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பா
நான் நினைத்தது நிறைவேறியிருச்சு. ஏனென்றால் சிறு வயசில நடிகையாக வேண்டும் என்பது என்னோட கனவு.
பிற மொழி, தமிழ் மொழியில் நடித்த அனுபவம்
நான் தமிழ் பொண்ணுதான். தமிழில் நடிப்பது ரொம்ப ஈசி. மற்ற மொழி படங்களை உள்வாங்கி நடிப்பது கொஞ்சம் சிரமம்தான்.
உங்களின் ரோல் மாடல்
என்னுடைய அம்மாதான். ஏனென்றால் எனது அம்மா ஒரு தொழில் முனைவோர். அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக வழிநடத்தக் கூடியவர்.
எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க விருப்பம்
ஷங்கர், மணிரத்னம், ராஜமவுலி என சொல்லிக் கொண்டே போகலாம்.
நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்
அசோக் செல்வனுடன் ஒரு படம் நடிச்சிருக்கேன். ரிலீசுக்காக வெயிட்டிங். இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.
மாடர்னா இருக்கீங்க... கிராமத்து கதை கிடைத்தால்
நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன்.
சினிமாவுக்கு வராவிட்டால்
நடிப்பு எனது கனவு. எப்படியாவது சினிமாவுக்குள் நுழைவதே எனது லட்சியமாக இருந்தது.
உடல், மனதை அழகாக வைக்க
தியானம் செய்கிறேன். மனசுல நிம்மதி, சந்தோஷம் இருக்கணும். நான் எப்பவுமே சந்தோஷமாக இருக்க முயற்சி பண்ணுவேன்.
விரும்பி சாப்பிடும் உணவு
எல்லா உணவு வகைகளும் பிடிக்கும். குறிப்பா இனிப்பு வகைகள் ரொம்பவே பிடிக்கும்.