Advertisement

சிறப்புச்செய்திகள்

'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

போலீசாக நடிப்பதில் செம கெத்து: ஐஸ்வர்யா ராஜேஷ் குஷி

01 ஆக, 2021 - 13:20 IST
எழுத்தின் அளவு:
Acting-police-as-pride-says-Aishwarya-Rajesh

தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி, தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி, வித்தியாசமான கதைகளில் கதாபாத்திரமாக வாழ்ந்து, முன்னணி நடிகையாக புகழ் வானில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குஷியாக பேசிய நிமிடங்கள் இதோ...

திட்டம் இரண்டு படத்தில் போலீசாக நடித்த அனுபவம்

ஜீப்ல வந்து இறங்கும் போதெல்லாம் செம கெத்தா இருந்தது... இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஊரடங்கு வந்ததால் சாப்ட்டு, துாங்கி வெயிட் போட்டேன். என்னம்மா போலீஸ் கேரக்டர் பண்ற நீங்க பொத பொதனு வந்திருக்கீங்கனு இயக்குனர் விக்கேனஷ் கார்த்திக் சொல்லிட்டாரு. இப்போ கொஞ்சம் வெயிட் குறைச்சு இருக்கேன்.

திட்டம் இரண்டு கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்
காணாமல் போன என் பிரண்டு ஒரு பொண்ணு என்ன ஆனாங்க, கண்டுபிடித்தார்களா என்பது தான் கதை. தமிழ்ல புதுசா இருக்கும் ரொம்ப திரில்லான அனுபவம் பக்கம், பக்கமா டயலாக் எல்லாம் இல்லை. ரொம்ப எமோஷனலா இருக்கும் இந்த படம்.

காக்கா முட்டை, கனாவுக்கு பின் ஹீரோயினாக நீங்கள்...
ஆமா... இது பெரிய சுமை தான். கண்டிப்பா நல்ல கதையை தேர்ந்தெடுத்து பண்ணனும். ஹீரோயின் கேரக்டரில் ஜெயிக்கிறது கஷ்டம்.என் படங்களை குடும்பத்துடன் பாக்கணும்னு விரும்புவேன் அப்படி ஒரு படம் தான் திட்டம் இரண்டு.

சின்னத்திரை டூ பெரியதிரை உங்கள் பயணம் எப்படி
நல்லா இருக்கு, தர்மதுரை, க/பெ.ரணசிங்கம் என ஒவ்வொரு படத்திலும் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். நான் எப்பவும் இயக்குனரின் நடிகை. அவங்க எழுதும் கதையை நடிப்பில் கொண்டு வர விரும்புவேன். மக்கள் என்னை நேசிப்பதில் சந்தோஷம்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் நிறைய படங்கள்
சமீபத்தில் தெலுங்கில் நிறைய படங்கள் வந்துச்சு.முதல்ல விஜய் தேவர கொண்டா உடன் ஒரு படம் நடித்தேன். அதில் சுவர்ணா கேரக்டர் மக்களுக்கு பிடித்தது. தொடர்ந்து நல்ல கதைகள் தெலுங்கில் பண்ண விரும்புகிறேன் எங்கிருந்து போனாலும் நல்ல வரவேற்பு இருக்கிறது பெருமையா இருக்கு.

நீங்கள் அதிகம் இணைந்து நடித்த விஜய்சேதுபதி பற்றி
விஜய்சேதுபதி ஒரு புத்தகம்... கதையில் சந்தேகம் வந்தா அவரிடம் கேட்பேன், காக்கா முட்டை பண்ணும் போது வேறுபடத்தில் ஹீரோயின் வாய்ப்பு வந்தது. ஹீரோயினா எப்போ வேணும்னாலும் பண்ணலாம் காக்கா முட்டைபண்ணினால் இயக்குனர் மணிகண்டனிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம்னு சொன்னாரு. அந்த படம் பெரிய திருப்புமுனையா இருந்தது.

தினேஷ், விஜய்சேதுபதி, தனுஷ், விக்ரம் இப்படி நிறைய நடிகர்களுடன் நடிக்கிறீர்கள். படப்பிடிப்பு தளத்தில் எப்படி
சேது, தனுஷ், விக்ரம் பார்த்தாலே கொஞ்சம் பயம் வரும், அதே மாதிரி வடசென்னை படத்தில் தனுஷ் கூட நடிக்கும்போது பயம் இருந்தது, ரீடேக் போக கூடாது என்று வேண்டிப்பேன். அது என்னமோ தெரியல பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது ஒருவித பயம் பதட்டம் இருக்கும். சமீபத்தில் ஒரு ஆந்தாலஜி படத்துல நடிச்சேன்; அதுல அந்த படக்குழுவினர் எல்லாம் ஐஸ்வர்யா வந்தா ஒரே டேக்கில் முடிச்சிடுவாங்கனு சொன்னாங்க, அதனால் அந்த காட்சி எடுக்கும் போது ரொம்ப பயந்து பதட்டமானேன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
‛ராஜா இசையில் பாடல் எழுதணும் : குட்டிப் பட்டாசு ராசாவின் ஆசை‛ராஜா இசையில் பாடல் எழுதணும் : ... நானும் தமிழ் பொண்ணு தான்... மனம் திறக்கிறார் ஐஸ்வர்யா மேனன் நானும் தமிழ் பொண்ணு தான்... மனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raj - ,
02 ஆக, 2021 - 10:55 Report Abuse
Raj Yes, Movie was super twist and her role. But , she missed roaring action. Soniya Agarval, Nayanthara could be a good choice.
Rate this:
01 ஆக, 2021 - 23:11 Report Abuse
Ranjit Kumar movie is good, but she didnt act as a good police role, looks dummy police
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in