மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹரிஹர வீரமல்லு' படம் நாளை ஜுலை 24ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது வரை முன்பதிவு மூலம் மட்டுமே 25 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாக டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் மொத்த தியேட்டர் வியாபாரம் சுமார் 120 கோடி என்று தகவல். 130 கோடி வரை வசூலித்தால் படம் லாபக் கணக்கை ஆரம்பித்துவிடும். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இப்படத்திற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தி தரப்பட்டுள்ளதால் முதல் வார வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் பவன் கல்யாணுக்கு இது ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படும்.
படம் ஓட வேண்டும் என்பதற்காக தனது துணை முதல்வர் வேலைகளை சற்றே தவிர்த்துவிட்டு கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார் பவன் கல்யாண்.