ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
பிரபல பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன் சாய் அபயங்கர். 'கட்சி சேரா, ஆச கூட' ஆகிய மியூசிக் ஆல்பங்கள் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு இசையமைப்பாளராக மாறினார். 'பென்ஸ்' படம்தான் அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தமான முதல் படம்.
அதற்கடுத்து சில தமிழ்ப் படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ஒரு படம் வெளிவருதற்கு முன்பே குறுகிய காலத்தில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
ஆர்ஜே பாலாஜி இயக்க, சூர்யா நடிக்கும் 'கருப்பு' படத்திற்கு முதலில் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ஆனால், அதன்பின் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இன்று 'கருப்பு' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மற்றவர்களை விடவும் சாய் அபயங்கர் இசை அந்த டீசரில் எப்படி உள்ளது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிரடி ஆக்ஷன் டீசராக உள்ளதால் சாய் அபயங்கரும் எனர்ஜியான பின்னணி இசையைத்தான் கொடுத்துள்ளார். அது ரசிகர்களின் வரவேற்பை எப்படி பெறப் போகிறது என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.