Advertisement

சிறப்புச்செய்திகள்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு | விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? | ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து | மம்முட்டி, மோகன்லால் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | 30 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா ஜப்பான் பயணம் | பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆன தெலுங்கு படம் | மொபைல் எண் விவகாரம் : 'அமரன்' குழுவுக்கு மாணவர் நோட்டீஸ் | 'ஏஞ்சல்' பட விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: திடீர் வில்லன் ஆன எம்.ஜி.ஆர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை நம்பி கடவுள் ஒரு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார் : மகன் பற்றி பிரியாராமன் கண்ணீர் பேட்டி

14 நவ, 2024 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Believing-in-me,-God-has-given-me-a-child:-Priyaraman-shed-tears-about-his-son

நடிகர் ரஞ்சித்தும், நடிகை பிரியா ராமனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இடையில் சில காலம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ரஞ்சித் நடிகை ராகசுதாவை 2வது திருமணம் செய்தார். பின்னர் அவரை விட்டு பிரிந்தார்.

தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரஞ்சித் தனது மூத்த மகன் ஆதித்யா ஆடிசம் பாதித்த குழந்தை என்பதை கண்ணீருடன் தெரிவித்தார். இதுவரை வெளி உலகம் அறியாத இந்த விஷயம் தெரியவந்தபோது எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தனது மகன் ஆதித்யா குறித்து பிரியா ராமன் கூறியிருப்பதாவது:

ஆதித்யாவை நாங்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. நான் ஆதித்யா அம்மா என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற மகனை வீட்டில் வளர்ப்பது என்பது சவாலான விஷயம். ஆதித்யாவுக்கு ஆட்டிசம் என்று சொன்னபோது, ‛நீ என்ன தவறு செய்தாய்? உனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது' என்று, ஆறுதல் சொல்வதாக நினைத்து என்னிடம் சிலர் சொல்வார்கள். நானும் வருத்தப்பட்டு அழுதிருக்கிறேன் என்றாலும், இதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு பல விஷயங்கள் புரிந்தது.

கடவுள் என்னை நம்பி, என்னிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கிறார். என் மீது கடவுளுக்கு அவ்வளவு நம்பிக்கை என்று தோன்றியது. ரஞ்சித்தின் நிறைய குணங்கள் ஆதித்யாவிடம் இருக்கிறது. மிகவும் பாசமான, அன்பான மகன். நாங்கள் சோகமாக இருந்தால், உடனே வந்து கட்டிப்பிடிப்பான். நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பான். அவன் எங்களின் அன்புக் குழந்தை. அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவோம்.

அவனது பயணத்தில்தான் எங்களது பயணமும் இணைந்திருக்கிறது. நான் எங்கே சென்றாலும் ஆதித்யாவையும் அழைத்துச் செல்வேன். மியூசிக், ஸ்போர்ட்ஸ் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். தனக்குப் பிடித்ததை சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறான். எங்கள் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள்'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ... 'புஷ்பா 2' பாடலுக்காக ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 'புஷ்பா 2' பாடலுக்காக ஸ்ரீ லீலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Columbus -  ( Posted via: Dinamalar Android App )
15 நவ, 2024 - 09:11 Report Abuse
Columbus A very positive commendable approach. God bless you.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in